அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, இலங்கையின் வைத்தியத்துறை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையின் படி, 60 வயதை எட்டிய அரசு ஊழியர்கள் கட்டாயம் ஓய்வு பெறவேண்டும். இதற்கமைய, அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் 300 மருத்துவ நிபுணர்களும் , 3110 மருத்துவர்களும் ஓய்வு பெற உள்ளனர் என வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவரும் சிறுவர் விசேட வைத்தியருமான லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் விசேட வைத்தியர்கள் குழுவொன்றை இழப்பதால் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்குவர் என்றார்.
இந்த முடிவு இரசாயன உர இறக்குமதியை ஒரேயடியாக நிறுத்துவது போன்ற முட்டாள்தனமான முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

