வாழைச்சேனை காயங்கேணி – மாங்கேணி கடற்கரைப் பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி மத்தி மாங்கேணி கடற்கரையில் நேற்று மாலை (20) இளைஞன் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில்.அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

