கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கத்தியால் குத்தப்பட்டு 30 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆணும், பெண்ணும் வீதியில் நடந்து சென்ற பெண்ணின் பையை திருட முற்பட்ட போது குறித்த இருவரும் வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளனர்.
இதன்போது சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசித்த இருவர் சந்தேகத்திற்கிடமான பெண்ணை பிடிக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவர்களை கத்தியால் குத்திவிட்டு பெண்ணை விடுவித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், காயமடைந்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

