துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி

315 0

tukish_coupதுருக்கி இராணுவம் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்துள்ளது.

துருக்கியின் ஆட்சியை அந்தநாட்டு இராணுவத்தினர் நேற்று இரவு கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகியிருந்தனர்.

துருக்;கியின் பிரதான நகரங்களான அங்கார மற்றும் ஸ்தான்புல் பிரதேசங்களில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து காணப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டது.

எனினும் துருக்கி இராணுவத்திடமிருந்து மீண்டும், அரச ஆதரவு படையினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருகியின் ஜனாதிபதி ரெசித் எர்டோகன் இதனை தெரிவித்துளார்.

துருக்கியின் ஜனாதிபதி வெளிநாட்டுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த சதிமுயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இது முறியக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்சிகவிழ்ப்பில் முயற்சியல் ஈடுப்பட்ட பல இராணுவத்தினர் கைதுசெய்யபட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சதி முயற்சியின் போது 42 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.