பாராளுமன்ற உறுப்பினர்களும் வரி செலுத்த வேண்டும்

134 0

நாட்டின் மொத்த சனத்தொகையில்  59 ஆயிரம் பேர் மாத்திரமே  வருமான வரி செலுத்துகின்றனர். இவர்களிடையே  137 பேர் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக வரி செலுத்துகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வருமானத்தை ஆராய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அவர்களும் வரி செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற அரச வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு என்ற ரீதியில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளோம். கடனை மீளச் செலுத்தல் இடைநிறுத்தப்பட்டள்ளது. மருந்துகளுக்கு வழங்க டொலர் இல்லாத நிலைமை உள்ளது.

கட்டிட நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பண வீக்கம் 90 வீதமாக உயர்வடைந்துள்ளது. வட்டி வீதம் 12 இல் இருந்து 36 வீதம் வரை உயர்ந்துள்ளது.

200 ரூபாவுக்கு இருந்த டொலர் 360 ரூபா வரை அதிகரித்துள்ளது. அந்நிய செலவணி இருப்பு இல்லை. இவ்வாறான நெருக்கடி நிலைமையில் நாடு உள்ளது.

இந்நிலையில் இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தில் மாத்திரம் தங்கியிருக்காது.நாங்கள் நாட்டுக்குள் முகாமைத்துவத்தை செய்து நெருக்கடிக்கு தீர்வு காணலம்.

தேசிய உற்பத்தி மற்றும் அரச வருமானங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் இவற்றை முகாமைத்துவம் செய்தால் 80 வீதம் பிரச்சினைகளை தீர்க்கலாம்.

இதேவேளை அரச வருமானத்திற்கு பிரதான ஒன்றாக வருமான வரி உள்ளது.  இரண்டு மில்லியன் சனத் தொகை உள்ள நாட்டில் 59 ஆயிரம் பேரே வருமான வரிச் செலுத்துகின்றனர். 2021 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இவர்களிடையே 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக வரிச் செலுத்தும் 137 பேரே உள்ளனர். அத்துடன் நாட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 15 ஆயிரத்து 69 நிறுவனங்களே வரிச் செலுத்தியுள்ளன. இவற்றில் 343 நிறுவனங்களே 80 வீதமான வரியை செலுத்துகின்றன.

வருமான வரி திணைக்களத்தில் 10 வகையான வரிகள் உள்ளன. ஆனால் அவற்றை முகாமைத்துவம் செய்து நடத்துகின்றனரா என்பது சந்தேகமே. 1000 பில்லியன் வருமானத்தை இவற்றின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதனை முகாமைத்துவம் செய்ய முறையான வேலைத்திட்டங்கள் கிடையாது.

புறக்கோட்டை மொத்த வியாபாரிகள்இ தேயிலை ஏற்றுமதியாளர்கள்இ ஆடை ஏற்றுமதியாளர்கள் வீட்டுத் தொகுதி நிர்மாண நிறுவனங்கள் ஆகியோரும் சரியான அளவில் வரிச் செலுத்துவதில்லை. அதேபோன்று மதுபான விற்பனை நிறுவனங்கள்இ எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களும் முறையாக வரிச் செலுத்துவதில்லை. இவற்றை முறையாக முகாமைத்துவம் செய்தால் வருமான வரியை அதிகரிக்கலாம்.

பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து  உறுப்பினர்களும்  வருமான வரி செலுத்த வேண்டும். முஇங்கு 100 -150 பேர் செலுத்தலாம். பலர் வரி செலுத்தாமல் இருக்கலாம். இதன்படி வருமான வரி ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருமான வரியை செலுத்துமாறு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை கேட்கின்றேன்.

இல்லையேன்றால் அவர்களை வருமானத்தை காட்ட ஆவணங்களை திறக்குமாறு கோருங்கள்.அத்துடன் வருமான வரிச் செலுத்த வேண்டிய அனைவரும் அதனை செலுத்த வேண்டும். அதனை மறைக்கக் கூடாது. அவ்வாறு வரிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.