இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் இலங்கையிடம் இல்லை

63 0

இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு  சீன கப்பல் சென்றமை தொடர்பான விவகாரம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அவசியம் என்பதை உணர்த்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் நிச்சயமாக இல்லை என தெரிவித்துள்ள அவர் இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் எங்களின் பாதுகாப்பு நலன்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஜனாதிபதி இதனை தெளிவாக டி தெரிவித்துள்ளார் அந்த புரிந்துணர்வு இலங்கையில் உள்ளது  அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதே கேள்வி  என அவர் குறிப்பிட்டுள்ளார்.