சைட்டம் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவது 6 மாத காலம் இடைநிறுத்தம்

395 0
மாலபே தனியார் மருத்துவக்க கல்லூரி தொடர்பாக மருத்துவ சங்கம் முன்வைத்த பரிந்துரைகளுக்கு அனுமதி வழங்க அடுத்த வாரத்துக்குள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச மருத்துவ அதிகரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அந்தச் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தமது பொறுப்பை நிறைவேற்ற சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தவறியுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவதை ஆறு மாத காலங்களுக்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதிகள் ஆகியோருக்கு இடையில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த ஆறு மாத காலத்துக்குள் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.