பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ….(காணொளி)

300 0

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து ஆண், பெண் ஆசிரியர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர்கள் மூவரையும் மீண்டும் பணியில் இணைந்துக்கொள்ளுமாறு கோரி வடக்கு ஆசிரியர்கள் போராடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் 10ஆம் திகதி வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் வன்னியில் கடமையாற்றிய ஆசிரியர்கள் தமக்கான கஸ்ரப்பிரதேச சேவைக்காலம் நிறைவடைந்ததாகத் தெரிவித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என போராட்டம் நடாத்தினர்.

ஐந்து வருடங்கள் கஸ்ரப்பிரதேசத்தில் சேவையாற்றியவர்கள் இப்போராட்டத்தின் ஈடுபட்டனர்.ஐந்து வருடங்கள் முடிவடைந்த பின்னர் இடமாற்றம் வழங்கப்படும் என முன்னர் கஸ்ரப்பிரதேச ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன் பின்னர் கஸ்ரப்பிரதேசத்தில் சேவையாற்றும் காலம் 6 வருடங்கள் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கல்விக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி பேராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் இதனைச் சுட்டிக்காட்டிய போது வாய்த்தர்கமாகிய நிலையில் செயலாளரை செஞ்சில் தள்ளி தாக்கியுள்ளதாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சின்னத்துரை தவராசா வடக்கு மாகாண சபையின் அமர்வின் போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.