யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் விபத்து(காணொளி)

370 0

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று மதியம் பாடசாலை சேவையில் ஈடுபட்டிருந்த வாகனமும், ஹயஸ் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து நல்லூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாடசாலைச் சேவை வாகனமும், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகவில்லை என்றும், ஹயஸ் வாகனத்தில் பயணித்த மூவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹயஸ் வாகனம் சேதத்திற்குள்ளாகியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன் பலாலி வீதி திருநெல்வேலிப் பகுதிக்கு அண்மையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தும், முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் முச்சக்கரவண்டி சேதமுற்ற நிலையில் பயணிகள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.