தெமட்டகொட அடுக்குமாடி குடியிருப்பிற்குள் திடீரென நுழைந்த பொலிஸார்

220 0

தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட அவசர தேடுதல் நடவடிக்கையில் பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த நடவடிக்கையில் 35 கிராம் ஹெரோயின், 100 போதை மாத்திரைகள் மற்றும் ஐந்து வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 44 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அளுத்கடை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.