இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 2022

119 0

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) அதன் 19வது வருடாந்த பொதுக் கூட்டத்தை கடந்த புதன்கிழமை (7ஆம் திகதி) இணையவழியில் zoom வலைதளத்தின் ஊடக காணொளி சந்திப்பை நடத்தியது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஒருங்கிணைந்த பங்காளர்களான  இலங்கை பத்திரிகையாளர் சங்கம், இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

2021 ஆம் ஆண்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது அதன் பொறுப்பின் அடிப்படையில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, ஊடகம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் செயல்பாடுகளை தொழில்முறைமயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு முன்னேறியுள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது, தனது சொந்த ஆய்வுப் பிரிவை அமைத்து, ஊடக வல்லுநர்களின் பாதுகாப்பு, ஊடக நெறிமுறைகள், அறிக்கையிடலின் சமூகப் பொறுப்பு மற்றும் இலங்கையில் ஊடகங்களை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பு போன்ற தலைப்புகளின் மீது பல ஆய்வுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டின் முக்கிய செயன்முறைகளாக, பெண் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட வழிகாட்டி, ஊடக வல்லுநர்களுக்கான மனித வள மேலாண்மைக் குறிப்பாக செய்தி பிரிவு மேலும் மேம்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, டிஜிட்டல் பாதுகாப்பு, தகவல் அறியும் உரிமை மற்றும் புலனாய்வு ஊடகவியல் பயிற்சி போன்ற பயிற்சித் திட்டங்களைத் தாண்டி , இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது  உண்மைச் சரிபார்ப்பு பிரிவான FactSeeker இன் கீழ் தவறாக பகிரப்பட்ட தகவல் மற்றும் தவறான நோக்கில் பகிரப்பட்ட தகவல்களைக் சரிபார்க்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.

தகவலறிந்த பொதுமக்களை சமூகத்தை உருவாக்குவதும், ஊடகத் தொழிலை நிபுணத்துவப்படுத்துவதற்கும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது அதன் பொறுப்பினை நிறைவேற்றும் வகையில் பல நிகழ்ச்சிகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து நடாத்தியது. அமெரிக்க தூதரகம், தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI), உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) , ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச மையம் (ICFJ), யுனெஸ்கோ (UNESCO), நோர்வேஜியன் ஊடகவியலாளர் ஒன்றியம் (NUJ), சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜெர்மன் சங்கம் (GiZ) மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM)போன்றவை அவற்றுள் அடங்கும்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது அதன் தலைவர் திரு குமார் நடேசன் தலைமையில் நடைபெற்றதுடன் அதன் நிர்வாகக்குழு அங்கத்தவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனடிப்படையில் திரு. குமார் நடேசன் இலங்கை பத்திரிகை சங்கத்தின் தலைவராகவும், திரு.சின்ஹ ரத்னாயக்க அவர்கள் துணைத்தலைவராகவும்  திரு. மனிக் டி சில்வா மற்றும் திரு. மோகன்லா ல்பியதாச இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர்களாகவும், செல்வி.சீதா ரஞ்சனி, திரு.உதயகலுபதிராண மற்றும் திரு.லசந்த டி சில்வா சுதந்திர ஊடக இயக்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர்களாகவும், திரு. லசந்த ரூ{ஹனுகே மற்றும் திரு.துமிந்த சம்பத் ஆகியோர் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர்களாகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.

ஏர்னெஸ்ட் மற்றும் யங் குளோபல் லிமிடெட், பத்திரிகை ஸ்தாபனத்தின் கணக்காய்வாளர்களாகவும், F.J & G Bசேரம்ஸ் கூட்டுறவு சேவைகள் (பிரைவேட்) லிமிடெட் பத்திரிகை ஸ்தாபனத்தின் செயலாளர்களாகவும் மீண்டும் நியமிக்கப்பட்டனர்.

தெற்காசிய சுதந்திர ஊடக சங்கம் (SAFMA), தமிழ் ஊடகக் கூட்டமைப்பு (TMA), ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் (SLMMF) மற்றும் ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு (FMETU) ஆகியவை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் இணைந்த அமைப்புகளாகும்.