நானும் மாத சம்பளம் பெறுவேன்

66 0

மே மாதம் 09ஆம் திகதி அமைச்சு பதவிகளை துறந்தோம். செப்டெம்பர் மாதம் இராஜாங்க அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ளோம். பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் குறைந்த வருமானம் பெறும் நிலையில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். ஆகவே அவர்களுக்காக நானும் மாத சம்பளம் பெறுவேன் என நீர்பாசனத்துறை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

நீர்பாசனத்துறை இராஜாங்க அமைச்சுக்கான கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கiயில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மே மாததம் 09ஆம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அமைச்சரவை முழுமையாக விலகியது.அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக இராஜாங்க அமைச்சு பதவிகளை துறந்தோம்.சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் நாட்டுக்கு சுமையாக இராஜாங்க அமைச்சுக்களை பொறுப்பேற்கவில்லை.அரச நிர்வாக கட்டமைப்பை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்காகவே இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர்களுக்கு விசேட வரபிரசாதங்கள் ஏதும் வழங்கப்படுவதில்லை.வர்த்தகர் என்ற ரீதியில் மாத சம்பளத்தை கூட என்னால் பெறாமல் இருக்க முடியும்,பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் குறைந்த வருமானம் பெறும் நிலையில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நான் மாத சம்பளத்தை பெறாவிடின் அது அவர்களுக்கு ஏதாவதொரு வழியில் பாதிப்பை ஏற்படுத்தும்,சனத் நிஷாந்த மாத சம்பளம் பெறவில்லை ஏன் நீங்கள் பெறுகின்றீர்கள் என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புவார்கள். நான் மாத சம்பளம் பெறுவேன்.

இராஜாங்க அமைச்சு ஊடாக பெறும் வரபிரசாதங்களை பெற்று அதனை நாட்டு நாட்டு மக்களுக்கான சேவைக்கு பயன்படுத்துவேன். குறுகிய அரசியல் எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றவை. சவால்களை பொறுப்பேற்க அவர்களுக்கு தைரியமில்லை,மாறாக விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள் என்றார்.