எலிசபெத் மஹாராணிக்கு பாராளுமன்றத்தில் மெளன அஞ்சலி

213 0

காலம் சென்ற பிரித்தானிய இரண்டாவது எலிசபெத் மகாராணிக்கு அனுதாபம் தெரிவித்து பாராளுமன்றத்தில் இன்று (09) இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9,30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது பிரதான நடவடிக்கையாக பிரதமரின் விசேட கூற்று இடம்பெற்றது.

இதன்போது பிரதமர் தினேஷ் குணவர்த்தன தனது கூற்றில்  பிரித்தானிய இரண்டாவது எலிசபத் மஹாராணியின்  மறைவு தொடர்பான அனுதாபம் இலங்கை பாராளுமன்றத்துக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

எலிசபத்  பிரத்தானியாவின் மஹாராணியாவும் பொதுனலவாய மாநாட்டின் தலைவராகவும் இருந்து வந்தார். அந்த வகையில் இலங்கை பாராளுமன்றத்தின் அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலிக்கு சபாநாயகம் உத்தரவிட்டு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்த்தன, காலம் சென்ற பிரித்தானிய இரண்டாவது எலிசபத் மஹாராணிக்கு பாராளுமன்றத்தில் அனுதாபம் தெரிவிக்க விசேட தினம் ஒன்றை ஏற்படுத்துமாறு சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.