அரச சீல் மதுபான விற்பனை; இருவருக்கு ரூ.40,000 அபராதம்

194 0

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமன்றி அரச சீல்  மதுபான விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த இருவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒருவரைக்  கைது செய்த  பளை பொலிஸார், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று (07) அவரை ஆஜர்படுத்தினர். குறித்த நபருக்கு  15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

அதேவேளை, 540 மில்லி லீட்டர் அரச சீல் மதுபானத்தை  விற்பனை செய்தமை மற்றும் உடமையில்  வைத்திருந்த குற்றச்சாட்டில் மற்றுமொருவர்  கைது செய்யப்பட்டு,  நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட போது, அந்நபருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.