சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

174 0

பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலம் மீது ஆளும் எதிர்க்கட்சி கடும் வாத விவாதத்தில் ஈடுபட்ட நிலையில் மாலை 4,50 மணியளவில் விவாதம் முடிவுற்றது. இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு சபை இணக்கமா என கேட்டபோது, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க சட்டமூலத்துக்கு வாக்கெடுப்பை கோரினார்.

அதனையடுத்து வாக்களிப்புக்காக கோரம் மணியை ஒலிக்க விடுமாறு சபாநாயகர் அறிவிப்பு செய்து, 5 மணிக்கு இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பதாக தெரிவித்தார்.

அதன் பிரகாரம் சட்டமூலத்துக்கு ஆதரவாக  91 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 10வாக்குகள் அளிக்கப்பட்டன. அதன் பிரகாரம் சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 81மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

இதன் மூலம் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை என்பன மீது 2,5வீத வரி அறவீடு அமுலாகின்றது.

சட்டமூலத்துக்கு வாக்களிக்கும்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 3பேரும் தேசிய மக்கள் சக்தி 3பேரும் விமல் மற்றும் டளஸ் தரப்பு தலா 2உறுப்பினர்கள் மாத்திரமே சபையில் இருந்து எதிர்த்து வாக்களித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் எதுவும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.