மட்டக்களப்பு வாழைச்சேனையில் 40 பவுண் தங்க ஆபரணம் 65 ரூபா பணம் கொள்ளை

214 0

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள யுனியன் கொலனி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் யன்னல் கதவை உடைத்து அங்கிருந்த 40 பவுண் தங்க ஆபரணங்கள் 65 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவம் இன்று வியாழக்கிழமை (8) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸரார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் தாயும் மகனும் இருந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு 12 மணிக்கு பின்னர் ஆழ்ந்த நித்திரையில் இருந்து காலையில் எழுந்திருந்தபோது வீட்டின் யன்னல் கிறிலை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கு பை ஒன்றில் வைத்திருந்த 40 தங்க ஆபரணங்கள் 65 ரூபா பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.