அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

201 0

ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட மொஹான் சமரநாயக்க இதற்கு முன்னர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றினார்.

08 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் முன்னிலையில் தினித் சிந்தக கருணாரத்ன பதவியேற்றுக் கொண்டார்.

அவர் இதற்கு முன்னர் உள்நாட்டு பத்திரிகையொன்றின் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றியுள்ளதோடு , ஜனாதிபதி ஊடக ஆலோசகராகவுடம் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.