நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து இலங்கைக்கு விதித்திருந்த பயணக்கட்டுப்பாடுகள் நீக்கம்!

176 0

நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.

இதனால், 11 நாடுகள் இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.

கிரேட் பிரிட்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, டென்மார்க், நோர்வே, சுவீடன், கனடா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் இலங்கைக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை முன்னதாக தளர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.