பலாலி வீதி இரண்டாம் ஒழுங்கையில் தனியார் ஒருவரினால், வெள்ள வாய்க்கால் மீது சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பாலத்தினை அகற்றக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் நேற்று(06) பலாலி பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பலாலி வீதி இரண்டாம் ஒழுங்கையில் மிக நீண்ட வெல்ல வாய்க்கால் ஒன்று காணப்படுகின்றது.
வெள்ள வாய்க்காலில் அப்பகுதியில் உள்ள மக்களின் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்றாதவாறு மாநகர சபை தடை விதித்துள்ளது.
பலாலியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பாலத்தினை அகற்றக் கோரி மக்கள் போராட்டம் (Photo) | Protest Balali Remove Illegally Bridge
இதன்போது தனியார் ஒருவரினால் தனது செல்வாக்கினை பயன்படுத்தி சட்டவிரோதமாக வெள்ள வாய்க்காலின் மீது பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ள வாய்க்காலின் மீது அமைக்கப்பட்ட பாலத்தை யாழ்ப்பாண மாநகரசபை உடனடியாக அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

