சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை

271 0

பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டது.

தேசிய சபையை ஸ்தாபிப்பது தொடர்பிலான யோசனையை விரைவாக பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க இச்சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய தேசிய சபையின் தலைமைத்துவம் சபாநாயகருக்கு பொறுப்பாக்கப்படுவதுடன்,பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர்,மற்றும் ஆளும் தரப்பின் பிரதம கொறடா,ஆகியோர் தேசிய சபையின் உத்தியோகப்பூர்வ உறுப்பினர்களாக அங்கம் வகிப்பார்கள்.

உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்படும் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் 73பேர் தேசிய சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.

அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய சபையை ஸ்தாபிக்குமாறு சிவில் அமைப்பினர் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.