11 ஆவது மாடியிலிருந்து விழுந்து ஒருவர் பலி – வெள்ளவத்தையில் சம்பவம்

191 0

கொழும்பு- வெள்ளவத்தை பகுதியில் உள்ள கட்டிட மொன்றின் 11 மாடியிலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாயா மாவத்தையில் பிரதேசத்தில் உள்ள 12 மாடி கட்டிட மொன்றின் 11 ஆவது மாடியில் துப்பரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக விழுந்து இவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இதன்போது உயிரிழந்தவர் 46 வயதுடைய கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்

சம்பவம் தொடர்பில்  வெள்ளவத்தை   பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.