ஜெனிவா செல்லவுள்ள நீதியமைச்சர்விஜயதாச ராஜபக்ஷ

219 0

இம்முறை மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள நாங்கள் அரச தூதுக்குழுவாக ஜெனிவா செல்லும்போது  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் சந்தித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதுடன் அரசாங்கத்தின் கொள்கையை  அவருக்கு  எடுத்துரைப்போம் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும்  பொறுப்புக்கூறல் நல்லிணக்க செயற்பாட்டை  சகல தரப்பையும் இணைத்துக் கொண்டு சுமுகமான முறையில்  முன்னெடுக்க முடியும் என்பதே எமது அணுகுமுறையாகும். இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் எவ்வாறான   பிரேரணைமுன்வைக்கப்படும் என்பதை  பார்த்த  பின்னரே அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இம்மாதம் 12ஆம் திகதி ஜெனிவா மனித  உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில்  இலங்கை குறித்த  அறிக்கையை  12 ஆம் திகதி மனித உரிமை ஆணையாளர்  மிச்செல்  வெளியிடவுள்ளதுடன்  அன்றைய  தினம்  இலங்கை குறித்த விவாதமும் நடைபெறவுள்ளது. மேலும் இம்முறை கூட்டத் தொடரில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, மற்றும்   வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் பங்கேற்கவுள்ளதுடன் அறிக்கையொன்றும் இலங்கை சார்பில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்து கொள்ளவுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிடுகையில்

வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை மக்கள் சகல தரப்பினருடனும் இணைந்து இலங்கையின் பொறுப்புக்கூறல் நல்லிணக்க செயற்பாடுகளை, நம்பிக்கைத் தன்மையுடன்  முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம்.  ஏற்கனவே   இது  தொடர்பில் நான்  பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளேன். பொறுப்புக்கூறல் நல்லிணக்க செயற்பாட்டை சகல தரப்பையும் இணைத்துக் கொண்டு சுமுகமான முறையில்  முன்னெடுக்க முடியும் என்பதே எமது அணுகுமுறையாகும்

இம்முறை மனித உரிமை பேரவை  கூட்டத் தொடரில் கலந்து கொள்ள   நாங்கள்  அரச தூதுக்குழுவாக  ஜெனிவா செல்லும்போது  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து  கலந்துரையாட  எதிர்பார்ப்பதுடன்   அரசாங்கத்தின் கொள்கையை  அவருக்கு  எடுத்துரைப்போம்.

இதே.வேளை இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் எவ்வாறான   பிரேரணைமுன்வைக்கப்படும் என்பதை  பார்த்த  பின்னரே அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும்