பிள்ளையான் கட்சியின் தேசிய மாநாட்டில் பிரதம அதிதியாக நாமல்!

195 0

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இவ்வாண்டிற்கான தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி. சந்திரகாந்தன் தலைமையில் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டார்.

ஆரம்ப நிகழ்வில் யுத்தத்தால்  உயிர் நீத்தவர்களுக்கு ஈகை சுடர் ஏற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டு தேசியகீதம், தமிழ்மொழி வாழ்த்து மற்றும் கலை கலாசார நிகழ்வுடன் ஆரம்பமான மாநாட்டில் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தனினால் வரவேற்புரையும் பின் கட்சி தலைவரால் தேசிய மநாடு பற்றிய தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது.

பின்னர் இவ்வாண்டிற்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு  நடைபெற்று மீண்டும் கட்சி தலைவராக சி.சந்திரகாந்தனும் செயலாளராக பூ. பிரசாந்தனும் பொருளாளராக எஸ்.தேவராஜனும் தெரிவுசெய்யப்பட்டனர் .

பின் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு பின்பு மாவட்ட கட்சி அமைப்பாளர்கள் நியமனம் தலைலரால் வழங்கி வைக்கப்பட்டது.

பின் தேசிய மாநாட்டிற்கான அரசியல் கொள்கை பிரகடனம் தலைவரால் வெளியிடப்பட்டது.

பல  சிறப்புரைகளும் இடம்பெற்றன. கடந்த இரு வருட காலமாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இவ் வருடம் நடைபெற்ற இந் நிகழ்வில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்