மின்சார சபை மறுசீரமைப்பு யோசனை அமைச்சரவைக்கு

216 0

மின்சார சபையினை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் இந்த மாத இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், மின்சார சபையினை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள் குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு மற்றூம் மறுசீரமைப்புக்கான வேலைத்திட்டமொன்றூம் நேற்று (4) இடன்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.