அரச நிறுவனங்களில் பொது மக்கள் இலகுவாக சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்

120 0

சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகின்ற பொது மக்களுக்கு உடனடி  சேவைகளை வழங்குவது    கட்டாயமாகும் என  சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பொதுமக்களின் வசதிக்காக சகல அமைச்சுகள் மற்றும் அரச அதிகாரிகளும் செயல்படவேண்டியது முதன்மையான பொறுப்பாகும் என்பதுடன், இதன்போது எந்தவொரு நபரும்  அசெளகரியங்களுக்கு  முகங்கொடுப்பதற்கு இடங்கொடுக்காது, வினைத்திறனான சேவையை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று சகல அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் ஜனாதிபதியின்  செயலாளர் சமன்  ஏக்கநாயக்க  குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்திடமிருந்து பொது மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளுவதற்காக பொது மக்களின் வசதி கருதி தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கீழ் காணும் தொலை பேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஊடாக பொது மக்கள் தங்களுக்கான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

சிசிர ஜயகொடி (ஜனாதிபதி சிரேஷ்ட உதவி செயலாளர்-  நீதித்துறை ), கையடக்க தொலைபேசி – 0718132590  , அலுவலக தொலைபேசி -0112354329 / 0112354354, கலாநிதி சுலக்சன ஜயவர்தன (ஜனாதிபதி மேலதிக செயலாளர் ), கையடக்க தொலைபேசி – 0719994133 / 0711992354, அலுவலக தொலைபேசி – 0112354329 / 0112354354, மின்னஞ்சல் முகவரி – addlsec.fsd@presidentsoffice.lk