அதிமுக சார்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான ஈபிஎஸ்சின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தலைமையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவு ரத்தாகிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஈபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

