வங்கி முறை மூலம் பணம் அனுப்பும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்க சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாகவும், முறையாகவும் பணம் அனுப்பும் வெளிநாட்டு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இலங்கைக்கு பணம் அனுப்பிய தொழிலாளர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய இவ்வாறு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

