குருந்தூர்மலை பௌத்த வழிபாடுகளுக்கு ரவிகரன் இடையூறாக இருப்பதாக பிக்குகள் பொலிசில் முறைப்பாடு

256 0

ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு முன்னாள் வடமாகாணமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இடையூறாக இருப்பதாகவும், பலதடவைகள் தாம் குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எடுத்த முயற்சிக்கு ரவிகரன் இடையூறாக இருந்ததாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பௌத்த பிக்குகள் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந் நிலையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை  தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட  முல்லைத்தீவு போலீசார் எதிர்வரும் செப்ரெம்பர் 02ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.