பலவந்தமாக காணாமல்போனவர்கள் குறித்த விசாரணைகளிற்காக நம்பத்தகுந்த பொறிமுறையொன்று உருவாக்கும் சவால் ஜனாதிபதியின் முன்னால் உள்ளது என சந்தியா எகனலிகொட தெரிவித்துள்ளார்.
பலவந்தமாக காணாமல்போனவர்கள் குறித்த விசாரணைகளிற்காக நம்பகதகுந்த பொறிமுறையொன்றை உருவாக்கும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்கும் சவால் ஜனாதிபதியின் முன்னால் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலவந்தமாக காணாமல்போனவர்கள் குறித்த சர்வதே தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் பொறிமுறைகள் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐநாவும் நம்பிக்கை இழக்கத்தொடங்கிவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
உலகலாவிய ரீதியில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆயுதமோதல்கள் காரணமாகவும் அரசியல்வன்முறைகள் காரணமாகவும்பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் காணாமல்போயுள்ளனர் அவர்களிற்கு இறுதி மரியாதை கூட செலுத்தப்படவில்லை இதேபோன்று இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் காணாமல்போனவர்கள் அலுவலகம் ஏற்படுத்தப்பட்ட போதிலும் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாகிதனக்கு நெருக்கமானவர்களை நியமித்ததை தொடர்ந்து அந்த அலுவலகம் நம்பிக்கை இழந்துவிட்டது சர்வதேச சமூகம் அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை இந்த சவாலை ஏற்று பலவந்தமாக காணாமல்போகச்செய்தலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதியை வழங்க முன்வரவேண்டும் குறிப்பாக வடக்குகிழக்கில் உள்ளவர்களிற்கு என தெரிவித்துள்ள அவர் பெண்கள் வாழ்நாள் முழுவதும் நீதிகோரி தங்கள் கணவன்மார்கள் பிள்ளைகளின் படத்தை சுமக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

