பொதுஜன பெரமுனவின் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைவு

314 0

பொதுஜன பெரமுனவின் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற சபை நடவடிக்கையின் போது எதிர்க்கட்சி தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர்.

இவ்வாறு எதிர்க்கட்சி ஆசனத்தில் ஜீ.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, சன்ன ஜெயசுமன, சரித்த ஹேரத், நாலக்க கொடஹேவா, குணபால ரத்ன சேகர, உபுல் கலப்பதி, திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயான கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, குமாரசிறி ஆகியோர் அமரந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் குறித்த 12 பேரும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துகொள்வதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.