அமெரிக்க ஓபன் – முதல் சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

120 0

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. உலகின் 5-ம் நிலை வீரரான கிரீசைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கொலம்பியா வீரரான காலனைச் சந்தித்தார்.

முதல் 2 செட்களை கோட்டை விட்ட சிட்சிபாஸ், மூன்றாம் செட்டை தனதாக்கினார். ஆனால் காலன் போராடி நான்காம் செட்டை கைப்பற்றினார். இறுதியில், சிட்சிபாஸ் 0 – 6, 1 – 6, 6 – 3, 5- 7 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.