அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் வடக்கு மாகாணத்துக்கு நேரடியாகப் பயணம் செய்து நிலமைகளை ஆய்வுசெய்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான நிபுணராகப் பணியாற்றும் ஜோன் ஹில்ஸ் என்ற அதிகாரி கடந்தவாரம் சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அவரது இந்தப் பயணத்தின்போது, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகத்தில் கடற்படை ஆலோசகராக உள்ள லெப்.கொமாண்டர் பிரையன் பேஜுடன் இணைந்து வடபகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.
கடந்த 8ஆம் நாள் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்ட அதிகாரி ஜோன் ஹில்ஸ், அங்குள்ள பிராந்திய இராணுவத் தலைமையகங்களுக்குச் சென்று பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட இராணுவக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவையும் ஜோன் ஹில்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

