புறக்கோள் ஒன்றில் CO2 இருப்பதைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

185 0

நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் கார்பன்-டை- ஆக்சைடு (CO2) இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அண்டவெளியில் பல அறிய புகைப்படங்களை பதிவுச் செய்து வரும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியே இந்தத் தகவலையும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது நாசா மூலம் தெரியவந்துள்ளது.

கிட்டதட்ட பூமியிலிருந்து சுமார் 700 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது வாயுக்களால் ஆன இந்த ராட்சத புறக்கோள். இதனை WASP-39 என்ற பெயரால் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். வியாழன் கோளைவிட பெரிய உருவில் உள்ள இக்கோள் 900 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உள்ளது. நமது பூமி எப்படி நட்சத்திரமான சூரியனை சுற்றுகிறதோ, அவ்வாறே இந்தக் கோளும் அதன் நட்சத்திரத்தை சுற்று வருகிறது. ஆனால் WASP-39 அதன் நட்சத்திரத்தை சுற்ற எடுத்துக் கொள்ளும் நாள் வெறும் நான்கு நாட்களே. அவ்வளவு வேகமாக WASP-39 அதன் நட்சத்திரத்தை சுற்றுகிறது.