யாழ்ப்பாண காவல்துறையினர் மீது அதிக முறைப்பாடுகள்

362 0

jaffna-violence-7யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காவல்துறையினருக்கு எதிராகவே அதிகமான முறைப்பாடுகள் கிடைப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் டீ. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் விபரங்களை மேற்கோள் காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கல்வித் திணைக்களம் மற்றும் கல்வித்துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் அதிகம் பதிவாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கிளிநொச்சியில் காணி தொடர்பான முறைப்பாடுகளும் அதிகம் பதிவாவகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.