ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செய்திகளை உறுதிப்படுத்தல் தொடர்பிலான பிரதி ஊடக பணிப்பாளராக சந்துன் அரோஷ பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தவிர ஆசிரியர் பீடம் – ஆங்கிலப் பிரிவின் பிரதி பணிப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச தகவல் உறுதிப்படுத்தல் சங்கத்தில் பயிற்சி பெற்றுள்ள இவர் , சிட்டிசன் பெக்ட் செக் என்ற செய்தி உறுதிப்படுத்தல் சேவையினை ஆரம்பித்தவருமாவார்.
செய்திகளை உறுதிப்படுத்தல் துறை தவிர , பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் செய்தி சேவையின் இலங்கை செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

