சீனா தனதுகடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை செய்யவேண்டும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கான https://asia.nikkei.com/நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை சீனா தனது கடன் நிவாரணத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாட்டை எட்டுவது இலகுவான விடயமாகயிராது எனவும் தெரிவித்துள்ளார்.
கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது என்பதையும் கடன்வழங்கிய அனைவரும் ஐக்கியப்படவேண்டும் தங்களிற்குள் மோதக்கூடாது என்பதையும் சீனாவிற்கு தெரிவித்துள்ளோம் என ரணில்விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆறு தடவை பிரதமராக பதவி வகித்த -ஜூலை 21 ம் திகதி நாடாளுமன்றத்தின் வாக்களிப்பின் மூலம் வெற்றி பெற்று தனது ஜனாதிபதி பதவியை ஆரம்பித்த ரணில்விக்கிரமசிங்க சீனாவின் இதய மாற்றத்தை தூண்டுவது சிக்கலான ஒரு பாதை என கருதுவதுடன் இது ஏனைய கடன் வழங்குநர்களையும் சார்ந்துள்ளது என குறிப்பிடுகின்றார்.
சீனா வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்றுகின்றது ஆகவே ஏனைய கடன்வழங்கும் நாடுகள் சீனாவுடன் எவ்வாறான இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் என்பதே முக்கியமான கேள்வி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதாரம் குறித்து கரிசனை கொள்வதற்கு மக்களிற்கு உரிமையுள்ளது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க அவர்களின் வாழ்க்கை தரம் வீழ்ச்சியடைந்துள்ளது கொள்வனவு சக்தி வீழ்ச்சியடைந்துள்ளது நாங்கள் தற்போது பொருளாதாரம் மிகவேகமாக வீழ்ச்சியடைவதை காண்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்துசமுத்திரத்தில் பூகோள அரசியல் நிலைமை தீவிரமடைகின்றது,ஆனால் நாங்கள் இதுவரை அதனை தவிர்த்துக்கொண்டுள்ளோம் எங்களின் கடன் பிரச்சினையை முற்றாக பொருளாதார பிரச்சினையாகவே பார்க்கின்றோம் எனவும் ரணில் வி;க்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் கடனை எவ்வாறு கருதுகின்றனர் கடன் நிவாரணத்தை எவ்வாறு கருதுகின்றனர் என்பதில் பிரச்சினைகள் காணப்படும் அவற்றில் சில பூகோள அரசியல் பாதிப்புகள் இருக்கலாம் எனவும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

