நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று (24) கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆஜரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

