இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்று வரும் தகராறு காரணமாக மத்துகமவில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்துகம, போபிட்டிய பாடசாலைக்கு அருகில் இனந்தெரியாத குழுவினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர் மத்துகம, போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த டொன் இந்திக்க துஷார என்ற 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த மற்றைய நபர் வட்டேவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

