குளியாபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு அதன் முன் காத்திருந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதில் படுகாயமடைந்த அவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குளியாபிட்டிய தண்டகமுவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும், கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

