திருகோணமலை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது

275 0

திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியாவை பிறப்பிடமாகவும், ரொட்டவெவயை வசிப்பிடமாகவும் கொண்ட 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரிடமிருந்து 650 மில்லி கிரேம் ஹொரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, எத்தா பெந்திவெவ பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபரிடம் 180 மில்லி கிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரிடம் 150 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்று (23) திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.