கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பொலிஸார் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்வதாக எதிர்க்கட்சி எம்.பி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
சில இடங்களில் 3 – 4 மணித்தியாலங்கள் இவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் பெலியாகொட பொலிஸ் நிலையத்தில் இவர்களைப் பார்ப்பதற்காக காத்திருந்தேன். அமைதியானப் போராட்டங்களையே இவர்கள் மேற்கொண்டார்கள். ஆரம்பத்தில் இவர்கள் மாணவர் உரிமைகளுக்காகவும் பின்னர் நாட்டு மக்களுக்காக, நாட்டில் தூய அரசியல் மாற்றம் ஒன்றுக்காகவும் போராடினார்கள். எனவே நாட்டுக்காக முன்னிலையான இவர்களை தடுப்புக் காவலில் வைப்பது அசாதாரணமானது எனவும் தெரிவித்தார்.
மாணவர்களை பயமுறுத்துவதற்காகவே ஆட்சியாளர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். மாணவர்களை இவ்வாறு கைது செய்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

