வாவியில் குதித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

101 0

குருநாகல் வாவிக்கு அருகாமையில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை இன்று (19) காலை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்வதற்கு பொலிஸார் முயற்சித்த போது விரைந்து செயற்பட்ட குறித்த  இளைஞர் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக வாவிக்குள் குதித்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் சோதனை செய்ய முற்பட்ட போது அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக வாவியில் குதித்த குறித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் வாவிக்குள் குதித்து மேற்கொண்ட தேடுதலுக்கு பின்னர் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது உயிரிழந்த இளைஞனின் கையில் இருந்து போதைப்பொருள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.