காலி முகத்திடலில் நீண்ட நாட்களாக தங்கியிருந்து போராட்டம் நடத்தியதால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதற்காக போராட்டக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தங்களைப் போராட்டக்காரர்கள் எனக் கூறிக்கொண்ட சிலர் சட்டவிரோதமாக காலி முகத்திடலுக்குள் நுழைந்து சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

