அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடந்தால் 500 கோடி மக்கள் உயிரிழப்பர் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் புகழ்பெற்ற ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 6 வெவ்வேறு அணுசக்தி போர் சூழ்நிலைகளின் விளைவுகளை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, நேச்சர் ஃபுட் இதழில் அந்த ஆய்வு முடிவுகள் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளன.
அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு முழு அளவிலான அணு ஆயுத மோதல் நடந்தால், மனிதகுலத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களை அது அழித்துவிடும். அதாவது சுமார் 500 கோடி மக்கள் அந்த போரில் கொல்லப்படுவர்.

