அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை

246 0

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யொமுரி சிம்புன் நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கப்பல் போர்க்கப்பல் என்ற பிரிவிற்குள் வரவில்லை,அது ஆராய்ச்சி கப்பல் என்ற பிரிவிற்குள் வருகின்றது  அந்த கப்பல் அம்பாந்தோட்டை வருவதற்கு நாங்கள் அவ்வாறே அனுமதி வழங்கினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.