அரசியல் பேசலாம் வாருங்கள் – 12 பிப்ரவரி

361 0

சல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கெடுத்த தோழமைகள், நண்பர்கள், பொதுமக்கள் என அனைவரும் சந்தித்துப் பேசவும், போராட்டத்தின் அனுபவத்தை பேசவும், அரச வன்முறையின் வலியை பகிரவும் ஒன்று கூடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

பங்கெடுத்து போராட்டத்தினை வலிமைப்படுத்திய தோழர்களுக்கு அன்பையும், நட்பையும், உற்சாகத்தையும், நம்பிக்கையையும், வாழ்த்துகளையும் மற்றும் தொடர்ந்து களத்தில் நிற்பதற்கான உறுதியையும் பகிர அனைவரும் பங்கெடுக்க வாருங்கள்.

போராட்டத்தின் வீரியத்தையும், உற்சாகத்தையும் வீழ்த்திவிட முனையும் சக்திகளை வெல்வதற்காய் ஒன்று கூடுவோம்.

இன்று நடைபெற்றுவரும் அரசியல் நிகழ்வுகள், மற்றும் கடந்த வாரங்களில் நடந்த நிகழ்வுகள் ஆகிய்வற்றினையும் , தமிழகத்தின் பிரச்சனைகளையும் தொகுத்து பார்ப்போம். இந்த பின்னனியில் மாற்று அரசியலை வலுப்படுத்தும் நிகழ்விற்கு உங்களை அழைக்கிறோம்.

இது குறித்தும், சல்லிக்கட்டு போராட்டம் குறித்தும் வரும் பிப்ரவரி 12ம் தேதி சந்தித்து பேசுவோம். மேலும், போராடிய மாணவர்கள்-இளைஞர்கள் மற்றும் இவர்களை பாதுகாத்த மீனவ மக்களுக்கு நமது ஆதரவை கொடுக்கவும், தாக்குதல் நடத்திய அரசு-காவல்துறைக்கு கண்டனத்தை பதிவு செய்ய வள்ளுவர் கோட்டத்தில் சந்திப்போம்.

அரசியல் பேசலாம் வாருங்கள்

விளக்க காணொளி :