எரிபொருள் விலை திருத்தம் இன்று?

118 0

இன்று (15) மீண்டும் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் எரிபொருளின் விலை குறையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

14 நாட்களுக்கு ஒருமுறை திங்கட்கிழமைகளில் எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படுகிறது.

இதனடிப்படையில் இறுதியாக டீசல் விலையை 10 ரூபாவினால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் எனப்படும் QR முறைமை நேற்று (14) நள்ளிரவு முதல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.