மக்கள் தன்னெழுச்சி போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான ரெட்டா என பரவலாக அறியப்படும் ரனிந்து சேனாரத்னவின் வங்கிக் கணக்குக்கு, அடையாளம் தெரியா நபர் ஒருவர் ஊடாக 50 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனது வங்கிக் கணக்கு உள்ள தனியார் வங்கிக்கு முறைப்பாடளித்துள்ளதாகவும், இன்று உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ரெட்டா எனும் ரனிந்து சேனாரத்ன குறிப்பிட்டார்.
‘நான் CIMA தகுதிமிக்க கணக்காளர் இவ்வாறான அடிப்படையற்ற பண வைப்புக்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து எனக்கு தெரியும்.
எனது கணக்குக்கு பணத்தை வைப்பிலிட்டு எம்மை, தவறாக சித்தரிக்க முன்னெடுக்கப்படும் மிக கீழ்த்தரமான சூழ்ச்சிகள் இவை.
இந்த அடையாளம் இல்லா பண வைப்பு குறித்து நான் சம்பத் வங்கியிடம் முறையிட்டுள்ளேன். நாளை ( இன்று) காலை சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்க்கின்றேன் என ரெட்டா தனது உத்தியோகபூர்வ சமூக வலைத் தளம் ஊடாகவும் பதிவொன்றினை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

