பூசாரி கைது – அழுத்தம் கொடுத்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை!

104 0

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தேவாலய பூசாரியை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த பொலிஸ் உயரதிகாரிகள் தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் உணவடுன, மெடரம்ப பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றின் பூசாரி ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட பின்னர் தென் மாகாணத்தில் பொலிஸ் உயரதிகாரிகள் பலர் சந்தேகநபரை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.