காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் தங்கியிருந்த மக்கள் மற்றும் கூடாரங்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பிரகாரம் அது தொடர்பான அறிவிப்பு ஒன்றையும் பொலிஸார் அப்பகுதியில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது காலி முகத்திடல் பொலிஸார் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் உடனிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

